அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ம்ருத்யுஞ்ஜய் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் கண் பரிசோதனை முகாம்.
குடியாத்தம் , நவ 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஸ்ரீ சத்திய சாய் சேவா சமிதி யில் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ம்ருத்யுஞ்ஜய் பவுண்டேஷன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது ஒற்றைத் தலைவலி கிட்ட பார்வை தூர பார்வை தொடர்ச்சியான தலைவலி கண்ணில் புரை நீக்குதல் கண்ணில் சதை வளர்ச்சி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. எழில் நகர் பாலிடெக்னிக் கூட்ரோடு குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி பகுதியில் தேவ முகுந்தன் ரங்கநாதன் சதீஷ் குமார் இவர்களின் முன்னிலையில் வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் செ சதீஷ்குமார் ஏற்பாடு செய்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment