அணைக்கட்டு, நவ 8-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பள்ளி கொண்டா பேரூராட்சி வெட்டு வானம் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இந்த இடத்தில் உயர் மின் விளக்கு கோபுரம் சாயும் நிலையில் உள்ளது அதை மாற்றி தரும்படி அணைக்கட்டு எம் எல் ஏ அவர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இதை தொடர்ந்து வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உடனே அதிகாரிகளை அழைத்து மாற்று இடத்தில் அமைத்து தரும்படி உத்தரவு பிறப்பித்தார் இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன் பேரூராட்சி செயலாளர் M.ஜாகிர் உசேன் வார்டு கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment