வேலூர் மாவட்டம் காட்பாடி சோதனை சாவடியில் 8 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர வாகனம்
பறி முதல்!
காட்பாடி ,நவ 8-
வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தீவிரம் காட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிலோ கணக்கில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் பறிமுதல் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் காவல்துறையினர் வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவாணன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 07.11.2024-ம் தேதி, வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த போது, ஆந்திராவிலிருந்து வேலூர் நோக்கி வந்த TN 25 BR 5025 என்ற MARUTI SUZUKI காரை சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த, சுமார் 80,000/- ரூபாய் மதிப்புடைய 08 கிலோ கஞ்சாவை கடத்தி கொண்டு வந்த,
திருவண்ணாமலையைச் சேர்ந்த
1. ராமராஜன் வயது/32, த/பெ.காசி, 2.ரசூல்லா வயது/21, த/பெ.காதர்பாஷா,, 3.வேலன் வயது/30, த/பெ.கருணாநிதி, ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 08 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment