உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் பேச்சால் புனிதம் கெட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம்.
குடியாத்தம் , டிச 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வழங்கிய பாபாசகேப் அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவாக பேசியதால் புனிதம் கெட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலையை பால் ஊற்றி தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (26.12.2024) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள பாபாசகேப் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலை வளாகத்தில் நடைப்பெற்றது.
நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் G. சுரேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சால் தீட்டுப்பட்டு விட்டதால் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் விஜயயேந்திரன், முனுசாமி, பாரத். நவீன்குமார், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார தலைவர்கள் சங்கர், தனசேகரன், மாநில சிறுபான்மை யினர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் MD.ராகிப், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய பாபு, மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட
R G P R S தலைவர் ஆனந்த வேல் மற்றும் நிர்வாகிகள் ரங்கநாதன் மனோகரன் வெங்கடேசன் தமிழ்ச்செல்வன் ஆருண் அப்பாஸ், ஆனந்தராஜ், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment