குடியாத்தம் ,25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் இன்று 25 .12.2024 தலைவர் நியமனம் Rtn J.பிரதீப் அவர்களின் தாயார் ஆசிரியை M. தமிழ்ச்செல்வி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் Rtn. R.அருள் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்டம்:3231 முன்னாள் ஆளுநர் JKN பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க செயலாளர் S.அருள், சாசன தலைவர் பொருளாளர் M.கோபிநாத், தலைவர் தேர்வு S.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் ஐயப்ப மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சு நாதன் தலைமையில் ரத்த வங்கி குழு ரத்ததானம் பெற்றுக் கொண்டது.
இந்நிகழ்வில் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் இளங்கோ பட வேட்டான், கோமல் கிரண் ,மோகன் பிரபு ,மற்றும் தமிழ்ச்செல்வி ஆசிரியர் குடும்பத்தைச் சார்ந்த ஆசிரியர் பிரியா, நந்தினி, ஜெய்சீலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment