காட்பாடி லயன் சங்கம் மற்றும் சேவகன் பொதுநல அறக்கட்டளை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 December 2024

காட்பாடி லயன் சங்கம் மற்றும் சேவகன் பொதுநல அறக்கட்டளை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்!

லயன்ஸ், சேவகன் சங்கம் சார்பில் இரத்த தான முகாம்

காட்பாடி , டிச 23 -

வேலூர் மாவட்டம் காட்பாடி  லயன் சங்கம் மற்றும் சேவகன் பொதுநல அறக்கட்டளை இணைந்து இரத்த தான முகாம் இன்று 9.30மணி அளவில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாராயணா திருமண மண்டபம் நடைபெற்றது 
நிகழ்ச்சிக்கு காட்பாடி லயன் சங்கத்தின் தலைவர் ஜே.பி.யுவராஜ் தலைமை தாங்கி இம்முகாமின் முதலாவதாக இரத்த தானம் செய்தார். முன்னதாக செயலாளர் எம்.கஜேந்திரன் வரவேற்று பேசினார் 
வேலூர் மாநகர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு,  இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி துணை கிளையின் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அவை துணைத் தலைவர் குமரன் ஆர்.ஸ்ரீனிவாசன் உதவும் உள்ளங்கள் சங்கத்தின் செயலாளர் எம்.ராமச்சந்திரன் சேவகன் அறக்கட்டளையின் இயக்குனர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். 
காட்பாடி லயன் சங்கத்தின் பொருளாளர் லட்சுமணன் வட்டாரத் தலைவர் செல்வமணி பொருளாளர் எம்.திலகர் வி.காமராஜ், இளைஞர் அணி செயலாளர் ராகேஷ், சுந்தரமூர்த்தி அமர்நாத் கே ஆர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad