நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற 23 ஆம் கலைவிழா மாநாடு நிகழ்ச்சியில் தன்னலமற்ற சேவைகள் கோபிநாத் அவர்களுக்கு சேவா ரத்னா விருது! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 December 2024

நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற 23 ஆம் கலைவிழா மாநாடு நிகழ்ச்சியில் தன்னலமற்ற சேவைகள் கோபிநாத் அவர்களுக்கு சேவா ரத்னா விருது!

தன்னலமற்ற சேவைகள் கோபிநாத் அவர்களுக்கு சேவா ரத்னா விருது 

குடியாத்தம் ,டிச 23 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற 23 ஆம் கலை விழா மாநாடு நிகழ்ச்சியில் கண்தானம், உடல் தானம், உடல் உறுப்புகள் தானம், ரத்ததானம், ஆதரவற்றோர் சடலங்கள் அடக்கம் , கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு- சுகப் பிரசவ பயிற்சி என்று பல்வேறு சேவைகளை புரிந்து வரும் குடியாத்தம் ஜி ஜி ஜி ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கோபிநாத்துக்கு சேவா ரத்னா விருதை வேலூர் மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவன வளாகத்தில், சங்கத்தின் 25- ஆம் ஆண்டு விழா 22.12.2024-அன்று நடைபெற்றது. விழாவில் கலைநிகழ்ச்சிகள் , சேவை புரிந் தோருக்கு விருதுகள் என்று பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. விழாவுக்கு சங்கத் தலைவர் ஜே.சிவகுமார் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் எஸ்.செளந்தரராஜன், முன்னாள் சேர்மன் த.புவியரசி மற்றும் பலர் விழாவில் பங்கேற்று பேசினர்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு சேவைகளை புரிந்து வரும் சமூக சேவையாளர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2015-ஆம் ஆண்டு முதல் 22.12.2024 வரையில் 894 கண் தானங்கள், 368 முழு உடல் தானம்,  மூளைச்சாவு அடைந்த மூவரின் உடல் உறுப்புகள் தானம், 377 ஆதரவற்ற சடலங்களை சொந்த செலவில் அடக்கம், 20 முறை ரத்த தானம்,  பல  இரத்த தான முகாம்கள் நடத்தி  ஆயிரக்கணக்கான ரத்தம் பெற்று அரசு மருத்துவமனைகளுக்கு அளித்தது, கல்லப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து எட்டு வருடங்களாக உணவும் உயிரும் என்ற நிகழ்ச்சி வாயிலாக, ஆயிரக் கணக்கான கர்ப்பிணிகள் சுகப் பிரசவம் அடைய பயிற்சிகளையும், ஊட்டச்சத்து உணவையும் வழங்கியது என்று தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டு வரும் குடியாத்தம் ஜி ஜி ஜி ரோட்டரி சங்க சாசனதலைவர் எம்.கோபிநாத்துக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், குடியாத்தம் கம்பன் கழக நிறுவனர் ஜே.கே.என்.பழநி, மூத்த வக்கீல் கே.எம்.பூபதி, குடியாத்தம் முத்தமிழ்ச் சுவை சுற்ற நிறுவனர் புலவர் வே.பதுமனார், தமிழியக்க வேலூர் மாவட்ட செயலாளர் இரா.சம்பத்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad