வேலூர் ,டிச 17 -
வேலூர் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியை சாதிய வன்மத்தோடு சரமாரியாக தாக்கி தப்பி ஓடிய நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசிக கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது
வேலூர் மாவட்டம் வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி மணிகண்டன் ஆதிதிராவிடர் சமூகம் (வயது 20) இவர் டிசம்பர் 5 ஆம் தேதி ஆர். என்.பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார் பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அதே பகுதி (வன்னியர் சமூகத்தை ) சேர்ந்த முருகன் என்பவர் மணி கண்டனிடம் குடிபோதையில் தகராறு ஈடுபட்டுள்ளார் பின்னர் தன்னை தற்காத்துக் கொள்ள கைகலப்பாக மாறியது சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் அங்கிருந்து தப்பிக்க நினைத்து இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது சாலையில் கிடந்த செங்கல் எடுத்து தலை மீது அடித்துள்ளார் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டு காயத்தை ஏற்படுத்தி முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான் பலத்த காய தோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த மணிகண்டனை வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் .இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் சாதி வெறியோடு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட முருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இடம் புகார் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர் இதுவரை முருகனை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப் தலைமையில் மனு அளிக்கப்பட்டது நடவடிக்கை எடுத்து முருகனை கைது செய்யாத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் காவல்துறை இடம் எச்சரித்து வந்துள்ளனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோ மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வையாபுரி வேலூர் தொகுதி துணை விஜய சாரதி ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் கற்பி பாலா மற்றும் வெங்கடேசன் சந்துரு விமல் குமார் இன்பா சிரில் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment