வேலூரில் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஓய்வூதியர் தினம் கொண்டாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 December 2024

வேலூரில் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஓய்வூதியர் தினம் கொண்டாட்டம்!

வேலூரில் ஓய்வூதியர் சங்கங்களின்
ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஓய்வூதியர் தினம் கொண்டாட்டம்!

வேலூர் ,டிச 17-

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு
குழுவின் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் ஓய்வூதியர் தின விழா வேலூர் பெல்லியப்பா கட்டிட கூட்ட அரங்கில் கொண்டாடப்பட்டது. 
ஓய்வூதியம் என்பது இனமாக தரப்படும் ஒன்றல்ல ஊழியர்களுக்க நியாயமாக தர வேண்டியது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை வழங்கிய நாளான இன்று ஓய்வூதியர் தினமாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம் இந்த விழாவிற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.  முன்னதாக மாவட்ட செயலாளர் பி.லோகநாதன் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் பா.ராமமூர்த்தி வேலூர் மா நகர தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர்
செ.நா.ஜனார்த்தனன், ஒருங்கிணைப்புக்குழு பொருளாளர் எ.கதிர்அமகது, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பா.ரவி, அகில இந்திய தொலை தொடர்பு துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பி.முருகன், அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க மாநில கௌரவ தலைவர் ஜி.நரசிம்மன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டல உதவி செயலாளர் டி.சேகர், அகில இந்திய இன்சூரன்ஸ் பென்சனர்கள் சங்கத்தின் கோட்ட தலைவர் ஆர்.கேசவன், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கே.குமார், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் எ.தாமோதரன் தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்க கோட்ட உதவி செயலாளர் டி.பிரபா சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பழைய ஓய்வூதிய முறையில் ஓய்வு ஊதியம் பெறுவோர்கள் அதனை தக்க வைத்துக்கொள்ளவும் புதிய ஓய்வு ஊதிய முறையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறையினை அமல் படுத்தாமல் பழைய ஓய்வு ஊதிய முறையியை அமல் படுத்தவும் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலையில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad