பேரணாம்பட்டு ,டிச 27 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அதிகப்படியான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை: 1 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஒய்.அத்குர் ரஹ்மான தமிழக அரசுக்கு மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தார்
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு
1 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஒய்.அத்குர் ரஹ்மான்.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் கடந்த 07.11.2024 அன்று நிலவரப்படி வெளி நோயாளிகளின் எண்ணிக்கை (new cases510members + old cases 211 members )(NCD cases 22 members + follow up cases 39 members ). ஆனால் பகுதி நேர டாக்டர்களின் எண்ணிக்கை இரண்டு தான். ஒன்று மருத்துவ அதிகாரி நிஷா. மற்றொருவர் ராதிகா. மேலும் சந்திரிகா, தீபா மற்றும் மரணி. மேலும் சந்திரிகா, தீபா மற்றும் உமாராணி என்று மூன்று செவிலியர்கள் மட்டுமே உள்ளனர் . மருந்தாளுநர் ஒரு நபர் மட்டுமே உள்ளார். நோயாளிகளின் பார்வை நேரம் காலை 7:00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மொத்தம் 330 நிமிடங்கள். நேரத்தின் கணக்குப்படி ஒரு நபருக்கு ஒரு நிமிடங்கள் கூட டாக்டர்களும், செவிலியர்களும் செலவழிப்பதில்லை. மேலும் பிரசவத்திற்கு அனுமதிக்கும் பெண்களை செவிலியர்களான சந்திரிகா, தீபா மற்றும் உமாராணி ஆகியோர் கர்ப்பிணி பெண்களை எத்தனை குழந்தைகள் உள்ளார்கள் என்று கேட்பதும் அதற்கு கர்ப்பிணி பெண்கள் மூன்று குழந்தைகள், நான்கு குழந்தைகள் என்று கூறினால் உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதுதானே என்று கர்ப்பிணி பெண்களை வசை பாடுகிறார்கள். பேரணாம்பட்டில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வதால் மாலை 7 மணிக்குதான் வீடு திரும்புகிறார்கள். அதனால் பெரும்பாலும் மாலை நேரங்களில் பெண்கள் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் டாக்டர்களும் ஒரு சில செவிலியர்களும் இருக்கையில் இருப்பதில்லை. இதனால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள். அப்படியே ஒரு சில டாக்டர்கள் இருக்கையில் இருந்தாலும் பரிசோதனை செய்வதில்லை .பெயர் என்ன என்று கேட்கிறார்கள். பின்னர் என்ன செய்கிறது? என்று வாய்வழியாக கேட்கிறார்கள். சீட்டை எழுதி அவர்கள் கையில் கொடுத்து போய் ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நாளை காலை வாருங்கள் என்று அனுப்பி விடுகிறார்கள். இதனால் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள். மேலும் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தியும் அதிகப்படியான டாக்டர்களையும், செவிலியர்களையும் பணி அமர்த்த வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைக்கு அதிகமான உபகரணங்கள் வழங்கவும், தவறு செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள் மீது மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அரசு மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். தவறு செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அக்கோரிக்கை மனுவில் நகரமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment