வீட்டின் மொட்டை மாடியில் இரும்பு தடுப்பு வேலி பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 27 December 2024

வீட்டின் மொட்டை மாடியில் இரும்பு தடுப்பு வேலி பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி!

வேலூர் , டிச 27 -

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த மேல் வல்லம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மொட்டை மாடியின் முன்பகுதியில் கிரில் தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி இரண்டு பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழப்பு. 
பணியின் போது கிரில் தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வீட்டின் அருகில் சென்ற மின்சார  கம்பியில் உரசிய தால் முகேஷ் (வயது 24), சதீஷ் (வயது 24) இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் இருவரின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad