பேரணாம்பட்டு பல்லலகுப்பத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம்: கலெக்டர் சுப்புலட்சுமி இன்று பங்கேற்பு!
வேலூர்,டிச.11-
வேலூர் மாவட்டம் அடுத்த பேரணாம் பட்டு அடுத்த பல்லலகுப்பம் ஊராட்சியில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் தாசில்தார் சிவசங்கர், துணை தாசில்தார் ஜெயந்தி, வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு )முகமது முக்தியார், வருவாய் ஆய்வாளர்கள் சர்குணா, சரவணன், தலைமை சர்வேயர் சரவணா உட்பட மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள் . இத் தகவலை பேரணாம்பட்டு தாசில்தார் சிவசங்கர் விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment