குடியாத்தம் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
குடியாத்தம் ,டிச 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்கினார் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் முன்னிலை வகித்தார்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார்
இந்நிகழ்ச்சியில் பல்வேறு வகையான கோரிக்கைகளை விவசாய பிரதிநிதிகள் முன் வைத்தனர்
குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள பகவத்சிங் சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்ய வேண்டும்
மோடி குப்பம் கொட்டமிட்டா சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
மோர் தானா அணையை சுற்றுலா தளமாகவும் குழந்தைகள் பூங்காவும் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கால்நடை மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும்
அகரம் சேரியில் 25 மீட்டர் அகலம் உள்ள கால்வாயை 100 மீட்டர் வரை உயர்த்தி கால்வாய் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள் இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா தோட்டக்கலை அலுவலர்கள் தமிழரசி
நகராட்சி நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் உதவியாளர் எழிலரசி
விவசாயிகள் பிரதிநிதிகள் சம்பத் நாயுடு சாமிநாதன் சேகர் பழனியப்பன்
உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment