கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு !
வேலூர், டிச.4-
வேலூர் மாவட்டம் கொணவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோழி லோடு ஏற்றிச்சென்ற வாகனம் முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி தகவல் அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்ட இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலசி ஆராய்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment