குடியாத்தம் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
குடியாத்தம் ,டிச 4-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் குமரன் (வயது 22) நெசவுத் தொழிலாளியான இவர் பணி சம்பந்தமாக நேற்று இரவு சுமாா் 10-30 மணி அளவில் குடியாத்தம் அடுத்த சேத்து வண்டை பகுதி உள்ள தேசிய நெடுஞ்சாலை புதிய சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது நிலை தடுமாறி அங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரல் மிது மோதி உள்ளார் இதனால் நிலை தடுமாறு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார் தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment