பெரும்பாடியில் வேளாண் கண்காட்சி ஏற்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 10 February 2023

பெரும்பாடியில் வேளாண் கண்காட்சி ஏற்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.


குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் கலவை தனியார் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு 7 மாணவர்கள் கடந்த சில தினங்களாக விவசாயிகளுடன் தங்கி கிராமப்புற வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக  தென்னை மரங்களை நோய் தாக்குவதில் இருந்து காப்பாற்ற ரூட் டானிக் மருந்தை வேர்களுக்கு செலுத்தும் முறை, கருவாட்டு பொறி விதை நேர்த்தி  செயல்முறை விளக்கங்கள், அளித்தனர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன்  100 மேற்பட்ட மரக்கன்றுகளை வைத்து மர வளர்ப்பதின் அவசியம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


அதனைத் தொடர்ந்து பெரும்பாடி கிராமம் அரசு கட்டிடத்தில் வேளாண் அறிவியல் கண்காட்சி வைத்து இதன் செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு செய்து காட்டினார், இதனைப் பள்ளி கல்லூரி மாணவர்கள், பெண்கள், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர், அறிவியல் கண்காட்சி ஏற்படுத்திய ஏழு மாணவர்களுக்கு கிராம மக்கள் முன்னேற்ற குழு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, இதனை ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் என் கண்ணபிரான் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா தேவி பாரதி தமிழ் சங்கர் நிறுவனர் A.தினேஷ் குமார் ஆகியோர் வழங்கி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


- குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad