காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜி.டி.பாபுவுக்கு இன்ட்ராக்ட் ஸ்மார்ட் போர்டு பரிசு அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் வழங்கினர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 February 2023

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜி.டி.பாபுவுக்கு இன்ட்ராக்ட் ஸ்மார்ட் போர்டு பரிசு அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.


வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவரும் ஜி.டி.பாபு ஆசிரியரின் கல்வி சேவையினை பாராட்டி அவரிடம் பயின்ற மாணவர்கள் அவருக்கு இன்ட்ராக்ட் இஸ்மார்ட் போர்டு பரிசாக வழங்கினார்கள்.

இதற்கான நிகழ்வு பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜேதீஸ்வரபிள்ளை தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உதவித்தலைமையாசிரியர் குமரன் வரவேற்று பேசினார். வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி, வேலூர் மாநகராட்சியின் முதல் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், முதல் வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.அன்பு ஆகியோர்  முன்னிலையில் கால்நடைமருத்துவர் ரவிசங்கர், மென்பொருள் பொறியாளர் ஏ.மணிகண்டன், தனியார் துறை சிலம்பரன், தேவராஜ், ஊரக உள்ளாட்சித்துறை உதவியாளர் சக்திவேலன், உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள்  வழங்கினார்கள்.முன்னாள் மாணவர்கள் சார்பாக ஆசிரியர் ஜி.டி.பாபுவிடம் இன்ட்ராக்ட் ஸ்மார்ட் போர்டினை வழங்கினர்.


ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தொழிற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.சச்சிதானந்தம், க.ராஜா, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  கணித பட்டதாரி ஆசிரியர் ஆர்.சிவராமன் தொகுப்புரையாற்றினார்.  அறிவியல் பட்டதாரி ஆசிரியர்  ஜி.டி.பாபு நன்றி கூறினார்.


விழாவில் பேசிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வேலூர் மாவட்டம் அரசு பொதுத்தேர்வில் தற்போது 38வது இடத்தில் உள்ளது இதனை உயர்த்த வேண்டும். கல்வியின் தரம் உயர இலட்சியத்துடன் செயல்பட்டு பணியாற்றிவருகிறோம் என்றார்.  மேலும் அவர் கூறுகையில் அறிவியல் ஆசிரியர் பாபுவிடம் படித்த மாணவர்கள் பரிசாக வழங்கியிருப்பது பாராட்டுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப் பள்ளியில் திட்டங்களை துவக்கி வைத்த நிகழ்வு மகிழ்சியளிக்கிறது.  


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலக்கிய மன்றம், வானவியல் மன்றம் போன்ற துறைகளில் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்பினை ஏற்படுத்தி தந்துள்ளார்கள் இப்பயினை சார்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன். 


கல்வி ஒரு சிறப்பான ஆயுதம், படிக்கும் காலத்தில் சிறப்பாக பயன்படுத்திகொண்டால் அனைவரும் உயரலாம் எனவே அனைவரும் சிறப்பாக கல்விபயின்று இப்பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி விழுக்காட்டினை தர முயற்சிக்க வேண்டும் என்றார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad