குடியாத்தம் நகர ஒன்றிய தமுமுக மருத்துவ சேவை அணியின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 February 2023

குடியாத்தம் நகர ஒன்றிய தமுமுக மருத்துவ சேவை அணியின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.


குடியாத்தம் நகர ஒன்றிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மாவட்ட பார்வை இழப்போர் தடுப்பு சங்கம், கரிகிரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்.

இன்று தரணம்பேட்டையில் உள்ள தமுமுக அலுவலகத்தில் நடைபெற்றது..முகாமிற்கு மாவட்ட தலைவர் P.S.நிஜாமுத்தின் தலைமை தாங்கினார், ஒன்றிய தலைவர் ஷஹாபுத்தீன்  அனைவரையும் வரவேற்றார். தமுமுக மாவட்ட செயலாளர் இக்பால்  மாவட்ட துணைச் செயலாளர் நூருல்லா நகர பொருளாளர் நியாஸ் அஹமத் ஒன்றிய  பொருளாளர் ஜாவித் பாஷா ஒன்றிய துணைச் செயலாளர்கள் அஸ்கர் பாஷா முஹம்மத் ரபி பாஷா நகரத் துணைத் தலைவர் பைரோஸ் கான் நகர துணைச் செயலாளர்கள் இம்ரான் அக்பர் மற்றும் ரீஹான் ஷர்புத்தீன் அஹமத் ஷரீஃப் காசிமா நிஜாமுத்தீன் முஷரப் சனாவுல்லா ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஹாபிஸ் முஹமத் அக்பர் ரஷாதி, இமாம் மஸ்ஜிதே ஜதீத். ஹாபிஸ் முஹம்மத் அலி செயீதி, தலைமை இமாம் மக்கா மஸ்ஜித், k .சாமிநாதன் மாவட்ட பொறுப்பாளர்- தமிழக மக்கள் ஒற்றுமை மேடைS.ஹாஜிரா சலீம்  ந.ம.உறுப்பினர், 1-வது வார்டு.M.அன்வர் பாஷா ந.ம.உறுப்பினர், 2-வது வார்டு I.முஷீரா இர்பான் 6-வது வார்டு. ந.ம.உறுப்பினர், J.ஹசீனா கபீர்  ந.ம.உறுப்பினர், 30-வது வார்டு. சீவூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஜிஸ் பாய் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.



மருத்துவர் ருபன் பிராங்லின் சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினார். முகாமில் 200 மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர், இதில் இருபதுக்கு மேற்பட்ட  பயனாளிகள் கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முடிவில் என்றும் மனிதநேய பணியில் S.ஷஹாபுத்தின ஒன்றிய தலைவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி குடியாத்தம் நகரம் (ம) ஒன்றியம் சார்பில் நன்றி தெரிவித்தனர்.



- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad