ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் இணைந்து இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 8 February 2023

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் இணைந்து இலவச மருத்துவ முகாம்.


காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இம் மருத்துவ முகாமில் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும், 52 ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட பொதுமக்களுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த  அடையாள அட்டை வழங்குதல், தேவையான மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், படிப்பு உதவித்தொகை விண்ணப்பித்தல், பேருந்து பயண அட்டை ரயில் பயண அட்டை மற்றும் 18 துறைகள் மூலம் உதவிகள் வழங்குவதற்காகவும் கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகளையும் செய்வதற்கான இந்த முகாம் நடைபெற்றது. 


சிறப்பு முகாம் நடைபெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைப்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க. முனுசாமி அவர்களுடைய வழிகாட்டுதலின்படியும், உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் அவர்களின் ஆலோசனையின் படியும் இம் முகாம் நடைபெற்றது. 


இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கே எம் ஜோதிஸ்வரபிள்ளை, காட்பாடி சிறப்பு வட்டாட்சியர் திருமதி. வேண்டா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சாமுண்டீஸ்வரி, ஸஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவு மேற்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது குறித்த ஏற்பாடுகள் சிறப்பாசிரியர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் மேற்கொண்டனர். முகாமில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களும் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பொதுமக்களும் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர். 


முகாம் ஏற்கனவே வேலூர் நகரம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே வி குப்பம் ஆகிய வட்டார அளவில் நடைபெற்றுள்ளது. இன்று ஐந்தாவது வட்டாரமாக காட்பாடி  வட்டார அளவில் சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது. மேலும் கணியம்பாடி, வேலூர் புறநகர் மற்றும் அணைக்கட்டு வட்டாரங்களிலும், இம்முகமானது 15.12.2003 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.


- வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad