விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 February 2023

விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை  தீா்வு நாள்  கூட்டம்  நடைபெற்றது .இதில் தலைமையிடத்து  துனை  வட்டாச்சியா் ரகுராமன் தலைமையில் நடந்தது மண்டல துணை வட்டாட்சியர் சுபி சந்தர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் தோட்டக்கலை அலுவலர் தமிழரசி வளத்தூர் மின்சாரத்துறை உதவி பொறியாளர் மாலினி அரசு போக்குவரத்து துறை இளநிலை உதவியாளர் பாலாஜி பங்கேற்றனர்.


தட்டப்பாறை கிராமத்தில் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும், மேல் முட்டுக்கூர் ஏரிக்கு தண்ணீர் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தை சாலை நிற்க வைப்பதால் போக்குவரத்திற்கு பெரிதும் பாதிப்பாக உள்ளது இந்த இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு மாற்றிய இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

குடியாத்தம் பகுதியில் மணல் கொள்ளைகள் அதிகமாக நடைபெறுகிறது அதிகாரிகள் இவைகளை தடுக்க வேண்டும். மோர்தனா கிராமத்தில் B S N L டவர் அமைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கோரிக்கை மனுகளை கொடுத்தார். மனுவைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் செய்தியாளர்  கே வி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad