குடியாத்தம் புவனேஸ்வரிப் பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அன்னை மணியம்மையாரின் 104 - வது பிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அன்னை மணியம்மையாரின் 104வது பிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் தினம்
சிறப்பாகவும், வெகு விமர்சனமாகவும் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பள்ளியின் செயலர் ச. இரம்யா கண்ணன்,MBA., M.COM, BEd ., அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தொடக்க உரை பள்ளியின் தாளாளர் ச.ஈஸ்வரி., வேலூர் மண்டல தி க மகளிரணி செயலாளர் அவர்கள் வழங்கினார். மேலும் இவ்விழாவிற்கு
ச. கலைமணி. தி.க.மாவட்ட மகளிரணி தலைவர் அவர்கள் தலைமையேற்று உரையை ஆற்றினார். மேலும் இவ்விழாவிற்கு இணைப்புரையாக
சு.வசுமதி., (மாவட்ட தி.க.மகளிர் பாசறை செயலாளர்) வழங்கினார்.
இந்நிகழ்விற்கு மண்டல மகளிரணி செயலாளர் ந.தேன்மொழி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா, தி.க. மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் இர.அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார், மாவட்ட ப.க.தலைவர் மா.அழகிரிதாசன், நகர அமைப்பாளர் வி.மோகன், நகர தலைவர் சி.சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கில் ஜி. லதா EX MLA (மாநில துணைத்தலைவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனம்), பெ. இந்திராகாந்தி (வே. மா.மகளிரணி து. தலைவர். தி க). திருமதி. வசந்திலட்சுமிபதி , மற்றும் வெ. தமிழரசி ஆசிரியர் கலந்துகொண்டு, உலக மகளிர் நாள் உரிமைகள் வரலாறு மற்றும் அன்னை மணியம்மையார் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
இறுதியாக நன்றியுரை இரா.இராஜகுமாரி., (நகர மகளிர் பாசறை தலைவர்) கூற இனிதே நிறைவுற்றது.
கருத்தரங்கிற்கு ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள், தி.க. கம்யூனிஸ்ட் கட்சி மகளிர் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment