தொடர்ந்து விஷம் போல எரிவாயு விலையை ஏற்றி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வேலூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று 11.3.2023 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பேரணாம்பட்டு நான்கு கம்பம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் எரிவாயு சிலிண்டரை பாடைக் கட்டி சுடுகாட்டில் புதைக்கும் போராட்டமும் நடைபெற்றது.
நிகழ்விற்கு வேலூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன் அவர்கள் தலைமை தாங்கினார். வளர்மதி ராஜசேகர், சகுந்தலா, மைதிலி, ருக்மணி தேவி, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹமத் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் நாட்டாம்கார் அக்பர், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினர். நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார தலைவர்கள் சங்கர், வீராங்கன், பெரியசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பாஸ்கரன், யுவராஜ், உவைஸ் அஹ்மத், துணை அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள் காளியப்பன், தினேஷ் மாநில ராகுல் விளையாட்டு அமைப்பின் தலைவர் ஆனந்தவேல் வட்டார நிர்வாகிகள் ராகுல், ஜலந்தர், ஆனந்தராஜ், அன்பரசன், நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பெரிய தம்பி, ரஜினிகாந்த், கோவிந்தசாமி, பழனிவேல், சுமன், முசாக்கீர், அஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் மகாலட்சுமி நன்றியுரை கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment