குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் தலைமை தபால் நிலையம் மற்றும் கிட்ஸி பிளே ஸ்கூல் இணைந்து நடத்தும் 2நாள் ஆதார் சிறப்பு முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 March 2023

குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் தலைமை தபால் நிலையம் மற்றும் கிட்ஸி பிளே ஸ்கூல் இணைந்து நடத்தும் 2நாள் ஆதார் சிறப்பு முகாம்.

குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம்மும் குடியாத்தம் தலைமை அஞ்சல் நிலையம் நடுப்பேட்டை கிட்ஸி ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் 2நாள்  ஆதார் சிறப்பு முகாம் நடுப்பேட்டை வ ஊ சி தெருவில் உள்ள கிட்ஸிப்ளே ஸ்கூலில் நடைப்பெற்றது.

திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பில் அஞ்சல் கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் மற்றும் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பிரேமாவதி ஆகியோரின் அறிவுறத்தலின்படி குடியாத்தம் தலைமை தபால் அலுவலர் சாந்தகுமாரி உதவி தபால் அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோரின் மேற்பார்வையில் உதவி வணிக தபால் அலுவலர் கே.ராஜேஷ் முன்னிலையில்  ஆதார் சிறப்பு முகாம்  வெள்ளி சனிக்கிழமைகளில் நடைப்பெறுகிறது.


ஆதார் சிறப்பு முகாமை குடியாத்தம் லயன்ஸ்சங்க மாவட்டபயிலரங்க ஒருங்கிணைப்பாளர் எம்கே.பொன்னம்பலம் அவர்கள் கலந்துகொன்டு துவக்கி வைத்தார்  நிகழச்சியில் லயன்ஸ்சங்க பொருளாளர் தில்லைநாதன் லயன்ஸ்சங்க செயலாளர் கோல்டன்பாபு லயன்ஸ்சங்க மாவட்டத்தலைவர்கள் என்எஸ்.விவேகானந்தம் ஆசிரியர் விவேகாநந்தன் வட்டாரத்தலைவர் கிரிதர்பிரசாத் எஸ்.ஏ.கலிமுல்லா முன்னாள் பொருளாளர் ரவிந்திரன்.உறுப்பினர் முருகதாஸ் மற்றும் பள்ளியின் தலைமை  ஆசிரியர் பெ.சுதா   ஆசிரியர்கள் அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்   சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு 5 வயது மற்றும் 15 வயதில் உள்ளவர்கள் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிக்கபடுகிறது ஆதார் அட்டையில் பெயர் முகவரி பிறந்த தேதி செல்போன் எண் பாலினம் மற்றும் தகுந்த உண்மை சான்றுகளுடன் சமர்ப்பித்து  திருத்தம் செய்யப்பட்டது.

புதிய திருமணங்கள் ஆனவர்கள் திருமண பதிவு அல்லது பஞ்சாயத்து தலைவர் சான்று கொடுத்து திருத்தம் செய்யலாம் முகாமில் அஞ்சல் சேமிப்பு கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad