வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 32 ஆம் ஆண்டு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 March 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 32 ஆம் ஆண்டு விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை தனியார் வீட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 32ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழா கலைநிகழ்ச்சி எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைப்பெற்றது.

பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் சடகோபன் அவர்கள் தலைமை தாங்கினார்.  பள்ளியின் முதல்வர் மேகலா முன்னிலை வகித்தார் .பள்ளியின் செயலாளர் ரம்யா கண்ணன் வாழ்த்துரை வழங்கினார், சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்றத்தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன் துனைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி அரசு மருத்துவ அலுவலர் உத்தமன் நேஷ்னல் மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பொன்மனம் லயன்ஸ் சங்கத் தலைவர் மில் பஞ்சாட்சரம் ஆடிட்டர் மோகன், திருநாவுக்கரசு ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


எல்கேஜி பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா  மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad