பின்னர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி குடியாத்தம் பேரணாம்பட்டு நகர ஒன்றிய பொறுப்பாளர்களை சந்தித்து இந்து முன்னணி அமைப்பு வளர்ச்சியை குறித்து ஆலோசனைகள் மற்றும் சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது குடியாத்தத்தில் 200 வருட பழமையான கோவிலை அரசாங்கம் இடிக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்களை அரசாங்கம் மிரட்டி வருகிறது .இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அதேபோல் பேரணாம்பட்டு குடியாத்தம் ஒன்றியத்தில் பல்வேறு கோயில்களை இடிக்க முயற்சி செய்து வருகின்றனர். பேரணாம்பட்டில் இந்து முன்னணி கொடியேற்றக்கூடாது என்று சொல்கிறார்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் பிரிவினைவாத கட்சிகளின் கொடிகள் மட்டும் இருக்கும்போது இந்து முன்னணி கொடி மற்றும் ஏன் ஏற்றக்கூடாது ஏன் தடை உள்ளது என்று தெரியவில்லை. இந்து முன்னணி தேசத்திற்கான இயக்கம் ஆன்மீக இயக்கம் பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப்புகள் தமிழகத்தில் செயல் படுகிறது. இதனை உளவுத்துறை கண்டு கொள்ள வேண்டும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட இந்தியர்கள் குறித்து தற்போது சர்ச்சை கிளம்பி உள்ளது தமிழகத்தில் 60 முதல் 70% வரை தொழிற்சாலைகள் மற்றும் விவசாய வேலைகளில் கூட வட இந்தியர்கள் தான் வேலை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு வட இந்தியர்களுக்கும் பங்கு உண்டு சீமான் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வதந்தியை கிளப்பி உள்ளனர். இது போன்று பொய்யான வதந்தி கிளப்புவோர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக தொழிலாளர்களுக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் 50 பேர் குழு கொண்ட நபர்கள் ஒவ்வொரு கம்பெனியாக சென்று தமிழக தொழிலாளர்களுக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கும் நம்பிக்கை கொடுப்பதற்காக விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறது. அரசாங்கமும் இதுபோன்று விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் வடமாநிலத்தவர்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டதற்கு அவர் மீது காழ்புணர்ச்சி காரணமாக வழக்கு பதியப்பட்டுள்ளது இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அதேபோல் வேலூரில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமிற்கு சென்று பார்த்த போது அவர்களுக்கு போதிய அளவில் வசதி வாய்ப்புகள் தமிழக அரசு அளிப்பதில்லை என்று தெரிவிக்கின்றனர். இதனை அரசு கருத்தில் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு படிக்கும் வசதி வாய்ப்புகளை மேலும் செய்து தர வேண்டும் அதேபோல படிக்கும் வசதி வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று கூறுகின்றனர்.
தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கின்றனர். மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு தொழில் தொடங்க வசதி வாய்ப்புகள் அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும். வடமாநிலத்தவர்கள் பல லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி தமிழகத்தில் குறிப்பாக சென்னை கோவை வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிராமங்கள் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் பெண்கள் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் போதைப் பொருள் விற்பனை செய்யும் பணம் முழுவதும் பயங்கரவாத இயக்கத்திற்கு செல்கிறது என்று கூறுகிறார்கள். இதனை உளவுத்துறை கண்காணித்து உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் குடியாத்தம் நகர தலைவர் கார்த்தி, யுவன், பேரணாம்பட்டு நகர தலைவர் ஹேம்பிரசாத், குடியாத்தம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ரவி, செயலாளர் மோகன் உட்பட பேரணாம்பட்டு குடியாத்தம் நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment