பள்ளி மாணவன் 31 கிலோ மீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றிக் கொண்டே ஸ்கேட்டிங் செய்து தனி நபர் உலக சாதனை படைத்துள்ளார். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 March 2023

பள்ளி மாணவன் 31 கிலோ மீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றிக் கொண்டே ஸ்கேட்டிங் செய்து தனி நபர் உலக சாதனை படைத்துள்ளார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கே.நிதின் (வயது 12). தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற தனி நபர் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிதின் 1 மணி நேரம் 45 நிமிடம் 57 வினாடிகளில், 31 கிலோமீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்து தனி நபர் உலக சாதனை படைத்துள்ளார்.

இதை அங்கீகரித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களை நோபல் உலக சாதனை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் நிதினிக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு மற்றும் குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad