வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான காவலர் குறை தீர்ப்பு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்று 25.03.2023-ம் தேதி வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான காவலர் குறை தீர்ப்பு நாள் வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுமார் 35 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் (RI-1, RSI-2, others-33) குறை தீர்ப்பு நாளில் தங்கள் குறைகளை தெரிவித்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்.

No comments:
Post a Comment