இந்த நிகழ்வுக்கு காட்பாடி தாலுக்கா குழு வாலிபர் சங்க தலைவர் கே.சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் எல்.நவீன் வரவேற்று பேசினார். காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், செயலாளர் எஸ்.எஸ்.சிவ்வடிவு, மேலாண்மைக்குழு உறுப்பினர் ருக்ஜிராஜேஸ்குமார் ஜெயின், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

வேலூர் மாநகராட்சியின் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா மகேந்திரன், மகேந்திரன், சமூக ஆர்வலர் நாயுடுபாபு, மாவட்ட தலைவர் திலிபன், செயலாளர் பார்தீபன், மாநில செயற்குழு மதன், ஆகியோர் போதை பொருளுக்கு எதிரான பிரச்சார பேரணி காட்பாடியில் துவங்கி காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு, சித்தூர் பேருந்து நிறுத்தம், ஓடைபிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம், ஆக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா, டி.கே.எம். கல்யாண மண்டபம் சந்திப்பு, விருதம்பட்டு கழிஞ்சூர்,சேனூர் வழியாக சென்று சேனூரில் நிறைவு பெற்றது.
இந்த பிரச்சார இயக்கத்தில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விழிப்புணர் பதாகைகளுடன் போதைக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும், போதை பொருட்கள் தவிற்பதற்கான நடைமுறைகள் குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
- வேலுர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment