
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேற்படி ஆஷா என்ற (14வயது) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி 4மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேற்படி ஆஷாவின் மாமன் ராஜேந்திரன் (வயது 37) த/பெ. சுப்பிரமணி (கட்டிட மேஸ்திரி) பிள்ளையார் கோவில் தெரு, வசந்த நடை என்பவர் விசாரணையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.
இச்செயலில் ஈடுபட்ட ஆஷாவின் மாமன் ராஜேந்திரன் என்பவர் 03-03-2023ம் தேதி அதிகாலை 03.30 மணிக்கு செக்யூர் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்த மாணவி ஆஷா அணைக்கட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பிரிவு ஏ1-ல் பயின்று வருகிறார்
அரசால் மற்றும் காவல் துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அனைவருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவிக்கின்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இனபராஜ்.

No comments:
Post a Comment