ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா மலைமேடு கிராமம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன் மற்றும் இவருடைய மகன் நந்தகுமார் அதே பகுதியை சேர்ந்த பழனி மற்றும் கலையரசியாகிய நான்கு பேர் மீது பணம் மோசடி தொடர்பாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது .
அதன் பெயரில் கடந்த 2013 ஆம் ஆண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் நடைபெற்றது. அரசு தரப்பில் உதவி வக்கீல் இந்திராஜி வாதாடினார்.
வழக்கின் இறுதி விசாரணையில் இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர். அதனை கேட்டு அறிந்த மேஜிஸ்திரேட் திருமால் பண மோசடி வழக்கில் சுரேந்திரன் நந்தகுமார் பழனி கலையரசி ஆகிய நான்கு பேரும் ஓராண்டு சிறையில் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கை சிறப்பாக நடத்திய அரசு உதவி வக்கீல் இந்திரா மெசேஜ் அப்போதைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஆணைப்பேட்டை போலீஸ் சூப்பிரண்ட் சிரஞ்சீவி பாராட்டினார் .
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்.

No comments:
Post a Comment