குடியாத்தம் கே எம் ஜி கலைக்கல்லூரியில் முதலுதவி பயிற்சி கருத்தரங்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 4 March 2023

குடியாத்தம் கே எம் ஜி கலைக்கல்லூரியில் முதலுதவி பயிற்சி கருத்தரங்கம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே எம் ஜி கலைக் கல்லூரியில் முதல் உதவி பயிற்சி கருத்தரங்கம் குடியாத்தம் கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரியில் ரெட் கிராஸ் மற்றும் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் இணைந்து முதலுதவி பயிற்சி கருத்தரங்கம் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.


இந்தக் கருத்தரங்கு எம் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மேலாண்மை அறங்காவலர் கே எம் ஜி பாலசுப்பிரமணியம் தலைவர் சுந்தரவதனம் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் ஜி ரகுவர்மன் வாழ்த்துரை வழங்கினார்.


இந்த ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டத் தலைவர் மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் அமைப்பாளர் செ நா ஜனார்த்தனன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முதல் உதவி பயிற்சி விரிவாளர் புலவர் முருகேசன் ஆகியோர் முதலுதவி அளிப்பதின் அவசியம் நோக்கம் செயல்பாடுகள் எவ்வாறு மேல் கொள்ள வேண்டும் என்று விளக்கத்தினை அழித்தனர் மேலும் இந்த பயிற்சியில் முதல் முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மாயக்க நிலையில் இருந்தால் எப்படி முதல் உதவி அளிப்பது செயற்கை  சுவாசம் அளிக்கும் முறை எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டு போடும் முறைகள் பாம்பு விஷ பூசிகள் கடியார் பட்டால் செய்யக்கூடிய நடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்தம் ஒழுகை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விவரங்களை அளிக்கப்பட்டது.


கே எம் ஜி கலைக்கல்லூரியில் நடைபெற்ற முதலுதவி அளிக்கும் முறையை குறித்து ரெட் கிராஸ் அவைத் தலைவர் மற்றும் முகாம் அமைப்பாளர்  செ நா ஜனார்த்தனன் விரிவுரையாளர் முருகேசன் மற்றும் திட்ட அலுவலர் திட்ட அலுவலர் ஜி ரகுவர்மன் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad