வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையை தர முயற்சி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்தார்.
இன்று குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி வட்டாட்சியர் விஜயகுமார் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு ஒன்றிய பெருந்தலைவர் என் இ சக்தியானந்தம் மருத்துவ அலுவலர் மாறன் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் ஜி எஸ் அரசு சுமதி மகாலிங்கம் அரசு வழக்கறிஞர் எஸ் எஸ் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment