குடியாத்தம் பாஜக சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 March 2023

குடியாத்தம் பாஜக சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பாஜக சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் நகர தலைவர் சாய் ஆனந்தன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தலைவர் ஜி மனோகரன் மாநில செயலாளர் கொ. வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் குடி மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடியாத்தம் நகராட்சி நவநிலையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது, மாவட்ட பொது செயலாளர் மகேஷ் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் லோகேஷ் குமார் மகளிர் அணி சேர்ந்த ஜோதி மஞ்சு செல்வி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad