இந்த நிகழ்வில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர் காந்தி முன்னிலை வகித்தார், தொழிலதிபர் ஜனாப் சௌகார் முன்னாபாய், நகர் மன்ற தலைவர் ST முஹம்மத் அமீன் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மற்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மேல்விஷாரம் நகர திமுக அலுவலகத்தில் திமுக கட்சி கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கீழ் விசாரம் அரசினர் பள்ளி மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில்கள் வழங்கப்பட்டது, இதில் நகர மன்ற துணைத் தலைவர் S குல்சார் அஹமத், நகர மன்ற உறுப்பினர்கள், கிளைக் செயலாளர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வாலாஜா தாலுகா செய்தியாளர் நிகால் அஹமத்

No comments:
Post a Comment