தட்டப்பாறை ஊராட்சியில், கே.வி.குப்பம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12- லட்சத்தில் உடற்பயிற்சி அரங்கம், மீனூர் கிராமத்தில் ரூ.11.10- லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், ரூ.23- லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து எம்எல்ஏ எம்.ஜெகன்மூர்த்தி, உடற் பயிற்சி அரங்கம், அங்கன்வாடி மையக் கட்டடம், பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் பா.சுஜாதா, வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மு.அ.ஷமீம் ரிஹானா, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலர் பி.மேகநாதன், வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.எல்.எஸ்.வனராஜ், வழக்குரைஞர் எஸ்.கோதண்டன், ஒன்றியக் குழு உறுப்பினர் கே.சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் கோ.துரைராஜ், ஊராட்சி துணைத் தலைவர் வசந்தி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment