வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இன்று விவசாய பெருங்குடி மக்களின் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் வன விலங்குகளை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கண்டன ஆர்ப்பாட்டம்.
மின்சார வேலி அமைத்து பயிர்களை காக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை உடனடியாக பெற்றுதர வலியுறித்தியும் குடியாத்தம் வன சரகத்தை கண்டித்து இன்று வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் N. குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி உழவர் பேரியக்க தலைவர் முரளி செயலர் பலராமன் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி கே ரவி மாநில பொறுப்பாளர்கள் அன்பு அசோகன், வேல்முருகன் மாவட்ட பொறுப்பாளர்கள் குணசிலன் அன்பு,ஞானவேல், பாபு ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரஞ்சித் குமார் சுரேஷ்குமார், சரவணன் ஒன்றிய செயலாளர்கள் பிரதாப் அரவிந்தன் அசோக் குமார் முருகன் நகர செயலாளர்கள் ரமேஷ் முதலியார் குமார், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர், முடிவில் மாவட்ட பொருளாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment