முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி காட்பாடி மைதானத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 2 March 2023

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி காட்பாடி மைதானத்தில் நடைபெற்றது.


தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி காட்பாடி மைதானத்தில் நடைபெற்றது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள  விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன்  தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் கலந்துக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி  மாணவிகளுக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கபடி குழுத்தலைவர் பூஞ்சோலை சீனிவாசன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், அரசுத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்கியராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad