ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 March 2023

ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்.


பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ மாவட்ட உயர்மட்ட குழுவின் ஆலோசனைக்கூட்டம் 28.02.20223 மாலை வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது. 


கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, ஆ.சீனிவாசன், ஜி.சீனிவாசன், சக்கேயுசத்யகுமார், எம்.ஜெயகாந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்  ஜி.டி.பாபு வரவேற்று பேசினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அ.சேகர், தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் துரை கருணாநிதி  வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் ராமன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் ஜி.கோபி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 


ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள செய்தித்தொடர்பாளர் வாரா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கல்வி மாவட்ட தலைவர் கே.காசி,  தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எஸ்.ராஜேஸ்கண்ணா,  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட் செயலாளர் மா.பா.தீனதயாளன், ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், தமிழ்நாடு  இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பெ.இளங்கோ, தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜி.சீனிவாசன், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் எம்.கோட்டீஸ்வரன், உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். 



பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்த போது ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து எங்களில் ஒருவராக செயலாற்றியதை இப்போதும் நினைவு கூறுகிறோம்.  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


05.03.2023 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல மாலை 5 மணிவரை கோரிக்கைகளை வலியுருத்தி மாநில அளவில் மாவட்ட தலைநகரில் வேலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


கோரிக்கைகள் 

  1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. அகவிலைப்படி 4%சதவீதம் கடந்த 1.7.2022 முதல் வழங்கிட வேண்டும்.
  3. சரண்விடுப்பு தடை ஆணையை ரத்து செய்து சரண்விடுப்பு சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும்.
  4. வெளிமுகமை (Outsourcing) முறையில் அத்து கூலிகளாக தமிழகத்தில்  அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக அரசாணை எண்.115;139;152ன்படி நியமனம்  செய்வதை ரத்து செய்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6லட்சம் பணி இடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும். 
  5. தொகுப்பு ஊதியம், சிறப்புஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
  6. இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 
  7. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றும் அரசாணை 115, 139, 152 ரத்து செய்ய வேண்டும். 
  8. அதே போல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad