வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டை பழைய காலணியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவருடைய மனைவி காஞ்சனா (வயது 45) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்துவிட்டார். அதன் பின் காஞ்சனா அவரது மகன் ஆனந்த (வயது 25 )மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற ஆனந்தன் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் காஞ்சனா மிகவும் சோகத்தில் இருந்து வந்தார் கணவருமில்லை பெற்ற மகனும் விபத்தில் இறந்து விட்டதால் துக்கம் தாங்க முடியாமல் மணம் உடைந்த காஞ்சனா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று காலை காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றார் அங்கு இரண்டாவது பிளாட்பாரத்தில் ரயில்வே காவல் நிலையும் அருகே சென்று கொண்டிருந்தபோது காலை 7 40 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது ரயில் நிலையத்தில் சிறிது நேரம் என்ற அந்த ரயில் மீண்டும் சென்னையில் நோக்கி புறப்பட்டது அப்போது சிறிது தொலைவில் காஞ்சனா ஓடி சென்று ரயில் முன்பு தண்டவாளத்தில் நடுவில் நின்றார் அவர் ரயிலை நோக்கி கைகளில் அசித்தபடி நின்று கொண்டு இருந்தார் இதனை கண்ட ரயிலை இயக்கம் டிரைவர்கள் உடனே அலாரத்தை ஒலித்து படி பிரேக் போட்டு ரயில் நிறுத்த பட்டது ஆனாலும் ரயிலில் நிற்காமல் காஞ்சனா மீது மோதியது இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இருந்தார்.
இதனை நேரில் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீஸ் சார் சென்று ரயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரதோ சோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
காஞ்சனா உடலை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது முதலாவது பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த வடமாநில பயணி ஒருவர் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இதனை கண்டு அவரது குடும்பத்தினர் அலரை துடித்தனர் சத்தம் கேட்டு ரயில்வே போலீசார் அங்கு சென்றனர் விசாரணையில் இறந்தவர் மத்திய பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் கிருபா (வயது 54) என தெரியவந்தது அவர் குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளார் ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தெரியவந்தது காட்பாடி ரயில்வே நிலையத்தை நேற்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டது.
- வேலூர் தலைமை செய்தியாளர் மு.பாக்யராஜ்


No comments:
Post a Comment