வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையத்தை சேர்ந்த வேலு என்பவர் தன்னுடைய நிலத்தை அளந்து தர குடியாத்தம் தாலுகா அலுவலகத்திலுள்ள முதுநிலை நிள அளவையர் விஜய் கிருஷ்ணா (வயது-47) என்பவரை அணுகினார். விஜய்கிருஷ்ணா அதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அளந்து கொடுக்கிறேன் என்று கூற இதுகுறித்து வேலு வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் காவலர்கள் தாலுகா அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ரூ.15 ஆயிரத்தை வேலு, விஜய்கிருஷ்ணா விடம் கொடுக்க அவன், தனது உதவியாளர் கலைவாணன் (வயது-27) என்பவரிடம் கொடுக்க சொன்னான். கலைவாணனிடம் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த கண்காணிக்கப்பட்ட விஜிலென்ஸ் காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் ஹெட்சர் வேயர் விஜய்கிருஷ்ணா, உதவியாளர் கலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்கியராஜ்
No comments:
Post a Comment