விழாவிற்கு பள்ளி தாளாளர் ரேவதிபத்மநாபன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் பி.செந்தில்வேல் வரவேற்று பேசினார். அறக்கட்டளை துணைத்தலைவர் பி.சந்திரசேகரன், முதல்வர் ஜி.பிரபா, துணைமுதல்வர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காட்பாடி வட்ட ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துளிர் பள்ளி தலைமையாசிரியை த.கனகா, வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கே.ஜி.சீனிவாசன், பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வி.இலக்கியாசந்துரு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி வட்ட செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சியின் துணைமேயர் எம்.சுனில்குமார், 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதாவன்னியராஜ் ஆகியோர் மழலையர்களுக்கு பட்டங்களையும் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி பேசினர்.
அப்போது துணைமேயர் எம்.சுனில் குமார கூறியதாவது. மாணவர்கள் பெற்றோர் வழி நடக்க வேண்டும் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு செயல்பட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உற்சாகபடுத்தி மேலும் மதிப்பெண்கள் பெறவும் வாழ்வில் உயரவும் ஆலாசனைகள் வழங்க வேண்டும் என்றார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பள்ளி முதல்வர் பிரபா நன்றி கூறினார்.
- வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்கியராஜ்.
No comments:
Post a Comment