வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர இளைஞர் ஜனதா தளம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு நகர இளைஞரணி தலைவர் டிடி நாகராஜன் தலைமை தாங்கினார் .வரவேற்புரை நகர கமிட்டி தலைவர் மாநில பொதுக்குழு உறுப்பினரும் எம் ராஜா ராம் முன்னிலை டி ஏ மணி கே முனுசாமி எம் பன்னீர்செல்வம் எம் கவுஸ் சுந்தா், பி தாமோதரன் ஏ கோபி எஸ் பி சந்திரசேகர் ஆர் பரசுராமன் முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டின் துவக்க உரை கே சுயராஜ் எம் எஸ் தனகோட்டி வி எம் முகமது அனிபா ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் மாநில செயலாளர் தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள காஞ்சிபுரம் எம் சண்முகம் சிறப்புரை ஆற்றினார்.

பெட்ரோல் டீசல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தவும் உயர்த்திய விலைகளை குறைக்க கோறியும் மானிய விலையில் ஏற்கனவே வழங்கி வந்த சிலிண்டர்களை ஏழை நடுத்தர மக்கள் நலனை கருதி மானிய விலையில் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் வழங்க மோடி அரசை வலியுறுத்தியும் உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த பெரிய ஒதுக்கள் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் ரேஷன் அட்டைகளுக்கு உளுத்தம் பருப்பு மற்றும் மளிகை பொருட்களை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment