யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 21 March 2023

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்.


குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு கோட்டாட்சியர் எம்.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார், கூட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டு வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள், குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து, விளை பயிர்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. இதுகுறித்து கூட்டங்களில் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. சேதமடைந்த பயிர்களுக்கு, உரிய இழப்பீடும் இதுவரை வழங்கவில்லை என புகார் கூறினர்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad