தமிழர்களின் உணவே மருந்து என்ற கருத்தை விளக்கி பேசிய அவர் பொதுமக்களிடம் எதற்கு எடுத்தாலும் நீங்களாகவே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போய் ஏதோ ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிடும் பழக்கத்தை முதலில் விடுங்கள். சிறு தலைவலி உடல் வலி, போன்ற எளிய உடல் உபாதைகளுக்கு வீட்டிலுள்ள இயற்கையான மூலிகை உணவு பொருட்களை பயன்படுத்தி எடுத்துக்காட்டாக இஞ்சி சாறு. மிளகு கசாயம் போன்றவற்றை போட்டு குடியுங்கள் என்றும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு எல்லாம் சித்த மருத்துவ முறை படி என்னென்ன செய்யலாம் என்ற கருத்துகளை மகளீர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும் வயது முதிர்ந்தோருக்கு பொதுவாக ஏற்படும் மூட்டுவலி, முதுகு வலி போன்றவற்றிக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.

இறுதியில் முகாமில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயமும், நிலவேம்பு கசாய பொடியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெரும்பாடி கிராம ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக திரு செழியன் ஆஷாதேவி அவர்களும். உடன் அரசு மருத்துவ மனை ஊழியர் R. சங்கரலிங்கம், பொயட்ஸ் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த உஷா மற்றும் சாந்த லட்சுமி ஆகியிரும் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment