துணைத் தலைவர் தனலட்சுமி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் அரசு பற்றாளர் கிராம நிர்வாக அலுவலர் காந்தி அவர்கள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கிராம பொதுமக்கள் 100 நாள் வேலை பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஊராட்சி செயலாளர் டி. பார்வதி பாபு மக்கள் நலப் பணியாளர் கோடீஸ்வரி அவர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் மஞ்சுளா பமீதா ஆகியோர் கலந்து கொண்டனர். மோடி குப்பம் ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

குடிமி பட்டி , மத்திரெட்டி பள்ளி, கீழ் கொள்ள பள்ளி வலசை, கொட்டமிட்டா, தனகொண்ட பள்ளி, சைனா குண்டா, மோடி குப்பம் ஆகிய கிராமங்களைச் சுற்றிலும் மலைப்பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகளால் தினசரி விவசாயிகளின் உயிர்களுக்கும் பயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் பல்லாண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் சொல்லுவனா துயரங்களுக்கு ஆட்பட்டு உள்ளனர்.
தற்போதும் இரவு நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக வருவதும் பயிர்களை அழிப்பதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது, மேற்படி காட்டு யானைகள் இப்பகுதிகளில் விவசாயிகளின் நிலங்களில் கிராமங்களில் நுழைவதை தடுத்திட ஒரே வழி மேற்படி கிராம காடுகளை சுற்றிலும் "சூரிய சக்தி மின்வெளி" அமைத்திட அரசும், வனத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். கிராம சபையில் தீர்மானம் இயற்றி அரசை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment