வேலூர் மாவட்டம் காட்பாடி ஸ்ரீ ஜனனி பேலஸ் காந்திநகர் பகுதியில் இன்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது இதில் நாட்டுப் பண் பாடி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாதனை புரிந்த அரசியல் சமூக சேவை கல்வியாளர் சிறந்த உடற்பயிற்சியாளர் சிலம்பம் பல்வேறு சமூக சேவை பெண்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நீதிபதி தலைவர் வட்ட சட்டப் பணிக்குழு மக்கள் நீதிமன்றம் S.தமிழ்ச்செல்வி BA.,LLM அவர்கள் கலந்து கொண்டு பெண்கள் இந்நாட்டு கண்கள் என்றும் அனைத்து துறையிலும் சமம் பெண்களைப் போற்றி பேசினார்கள். சிறப்புரை காட்பாடி R. சேகர் ADSP கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். காட்பாடி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
அரியூர் ரேகா SI அவர்கள் முத்துரங்கம் கலைக் கல்லூரியில் பயின்றவர் அவர்களுடைய ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வாங்கினார்கள் இருவரும் சந்தித்து என்னுடைய மாணவி ரேகா அவர்கள் வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் எஸ் ஐ யாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும் கூறினார்கள் பிறகு பேசிய ரேகா எஸ் ஐ அவர்கள் பெண்கள் சுதந்திரமாகவும் ஆண்களுக்கு சமம் எனவும் பேசினார்கள்.
வழக்கறிஞர் பிரசிடெண்ட் காட்பாடி பார் கவுன்சிலிங் பாலு வெங்கடாசலம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியின் நடுவில் தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் செய்தி மாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது இதில் வழக்கறிஞர் ஜாயிண்ட் செகரட்டரி ஆப் பார் அசோசியேசன் J. காஞ்சனா அறிவழகன் அவர்கள் கலந்துகொண்டு தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் செய்தி மாடல் வெளியிட்டார். வழக்கறிஞர் அச்சம் தவிர் பவுண்டேஷன் நிறுவன தலைவருமான ஜெய் ஸ்ரீ தேவி சம்பத் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரை கூறி தமிழ்நாடு பெண் சாதனையாளர் விருது வழங்கினார்கள். வேலூர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாமன்ற உறுப்பினர் 53 வது வார்டு வேலூர் மாநகராட்சி பாபி கதிரவன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை கூறினார்கள்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சட்டவிழிப்புணர்வு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மு பாக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை கூறியும் தமிழ்நாடு பெண் சாதனையாளர் விருது வழங்கினார். வேலூர் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சமூக சேவை மற்றும் பல் வேறு துறைகளில் சிறந்த விளங்கிய பெண்களை தேர்வு செய்து தமிழ்நாடு பெண் சாதனையாளர் விருதுகள் 2023 வழங்கப்பட்டது.
முடிவில் தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் T. மதிவாணன் சதீஷ்குமார் சசிகலா CEO நன்றியுரை கூறினார் பின்னர் தேசிய கீதம் பாடி நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நீதிபதிகள் காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாதனை பெண்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment