குடியாத்தம் வருவாய் கோட்டாச்சியா் அலுவலத்தில் ஆதி திரவிடா் SC/ST கலந்தாய்வு கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 31 March 2023

குடியாத்தம் வருவாய் கோட்டாச்சியா் அலுவலத்தில் ஆதி திரவிடா் SC/ST கலந்தாய்வு கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் SC/ST கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது, கூட்டத்திற்க்கு  வருவாய் கோட்டாச்சியா் மு  வெங்கட்ராமன் தலைமை தாங்கினாா். நோ்முக உதவியாளா் கலைவாணி வரவேற்றாா்.

இதில்  காவல் துணன கண்கானிப்பாளா் ராமமூாத்தி தனி வட்டாச்சியாா் சரவணன் குடியாத்தம் வட்டாட்சியர் விஜயகுமார் கே வி குப்பம் வட்டாட்சியர் கீதா மற்றும் கே சீதாராமன் தலித் குமார் மோடி குப்பம் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.


தாழையாத்தம் ஊராட்சியில் எஸ்சி எஸ்டி பிரிவை சார்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது இந்த இடத்தை மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார் அதை மீட்க வேண்டும்.


வீடு இல்லாத எழை எளிய எஸ்சி எஸ்டி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மோடி குப்பம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்திகள் தர வேண்டும் கொண்டான் துளசி கிராமத்தில் உள்ள இருளர் குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி. ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad