தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக்குழு கூட்டம் மான்ய கோரிக்கை அறிவிப்புகளுக்கு அரசுக்கு நன்றி கோரிக்கை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 April 2023

தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக்குழு கூட்டம் மான்ய கோரிக்கை அறிவிப்புகளுக்கு அரசுக்கு நன்றி கோரிக்கை.


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று வேலூரில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  

ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் எம் பாண்டுரங்கன், எம்.நாகலிங்கம், எஸ்ரமேஷ், எஸ்.சச்சிதானந்தம், டி.எல்.ஜெயபிரகாஷ், டி ராதாகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் எஸ். மரகதம்,  எல் கோபி ஆகியோர் பேசினர்.

பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. தொழிற்கல்வி ஆய்வகங்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பெறத்தக்க வகையில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன.  இதனைத் தொடர்ந்து தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளுக்குத் தேவையான ஆய்வகங்கள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் மான்ய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை நாங்கள் மனதார வரவேற்கின்றோம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  2. அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் நியமனம், அரசுப்பள்ளிகளில் ஆண்டு விழா, உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள், நூலகங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை ஏற்றும் தேர்தல் வாக்குறுதியின் படியும்  தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதிய வழங்க உரிய ஆணைகளை உடனே நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.
  4. மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் தொழில்திறன்கள் என்ற புதிய பாடத்தினை அறிமுகம் செய்து மேலும் தொழில் திறன்களை வழங்கி அதற்கென தனியாக சான்றிதழ்களை வழங்க ஆணையிட்டுள்ள தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.  அதே வேளையில் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாகும் போது அப்பள்ளியில் இப் பாடப்பிரிவினை மூடும் நடவடிக்கையினை கைவிட்டு தொடர்ந்து கல்வி பெற ஏதுவாக காலிபயிடங்களை நிரப்பிட வேண்டுகின்றோம்.


மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடத்தினை முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் என பெயர் மாற்றம் செய்து வழங்கிட கோருகின்றோம்


பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களையும் முறையான காலமுறை ஊதியம் வழங்கி பணிவரன் முறை செய்திட கோர்கின்றோம், பின்னர் செய்தியாளர் இடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது  கடந்த 11 ஆண்டுகளாக தொழிற்கல்வி என்ற தலைப்பில் மானிய கோரிக்கையில் இடம்பெறாத நிலையில் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் மானிய கோரிக்கையில் தொழிற்கல்வி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு இரண்டு வகையான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தொழிற்கல்வி சீரமைக்கப்படும் என்றும் நடப்பு கல்வி ஆண்டு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் வேலை வாய்ப்பு திறன்களை கொண்டு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கக் கூடியது அரசின் இந்த முடிவினை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என்று  மாநில ஒருங்கிணைப்பாளர் கூறினார்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்யராஜ். 

No comments:

Post a Comment

Post Top Ad