இளவம்பாடி பள்ளியில் ஆண்கள் 41, பெண்கள் 23. மொத்தம் 64 மாணவர்கள் மற்றும் முலைகேட் அரசு பள்ளியில் ஆண்கள் 22, பெண்கள் 17 மொத்தம் 39, மொத்த ஆண்கள் 63, பெண்கள் 40, ஆக மொத்தம் 103 மாணவ மாணவிகள் இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு மையத்தின் மகிழ்ச்சியை சுற்று வட்டார கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த தேர்வு மையம் அமைய அரும்பாடுபட்ட நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மூளைகேட் அரசு பள்ளி PTA தலைவர் சதீஷ்குமார் அலுவலர் K.P. ராஜ்குமார் அவர்கள் இலவம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
உடன் இலவம்பாடி பள்ளியின் PTA தலைவர் நாகேந்திரன் SMC குழு தலைவர் தமயந்திபிரபு துணை தலைவர் கோமதிஸ்டாலின் சமூக ஆர்வலர் M.ராஜ்பாபு மற்றும் கல்வியாளர் கிராம மேட்டுக்குடி மக்கள் பிரதிநிதிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- அணைக்கட்டு தாலுகா செய்தியாளர் ஸ்டாலின்.
No comments:
Post a Comment