இப்தார் நோன்பு திறப்பு, மதநல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 7 April 2023

இப்தார் நோன்பு திறப்பு, மதநல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், டாக்டர் அ.மு.இக்ராம் சமூக நல அறக்கட்டளை இந்திய மருத்துவ சங்க வேலூர் சி.எம்.சி கிளை இணைந்து இப்தார் நோன்பு திறப்பு, மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு விழா என முப்பெரும் விழா காட்பாடி குமரன் மிலிலினியம் பிளாசா அரங்கில் 03.04.2023 மாலை 6.27 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் நலிந்த 25 குடும்பத்தினருக்கு அரிசி உள்ளிட்ட 27வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக இந்திய மருத்துவ சங்க செயலாளர் அ.மு.இக்ராம் வரவேற்று பேசினார். உதவும் உள்ளங்கள் சங்கத்தின் நிர்வாகி கே.கஸ்தூரிராமன் தொகுப்புரையாற்றினார்.  


வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் இப்தார் நோன்மை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது. அனைத்து சமயங்களும் உதவும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. தேசிய ஒற்றுமை அடிப்படையில் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் சமயங்களை சார்ந்தவர்கள் பங்கேற்றுள்ளது சிறப்பாக உள்ளது என்றார்.  


மத நல்லிணக்க உறுதிமொழி காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜைன சமய வழிபாட்டாளர் ருக்ஜி ராஜேஷ்குமார்ஜெயின், கிஸ்துவ சமய பேராயர் வேலூர் மறை மாவட்ட பேராயர் சர்மா நித்யானந்தம், இந்து சமய வைதீக வழிபாட்டாளர் விநாயகமூர்த்தி, இஸ்லாமிய சமய வழிபாட்டாளர் பி.தௌபீகுல் இஸ்லாம் உமரி, இர்பாஸ் ஆகியோர் மத நல்லிணக்கம் குறித்து பேசினர். 


அரிசி உள்ளிட்ட 27வகையான மளிகை பொருட்கள் விருதம்பட்டு, காட்பாடி, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 குடும்பத்தினருக்கு 75ஆயிரம் மதிப்பீட்டில் அரிசி உள்ளிட்ட 27வகையான மளிகை பொருட்களை இக்ராம் அறக்கட்டளை சார்பில் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் மற்றும் மருத்துவர்கள் இணைந்து வழங்கினர்.


வருகை தந்த அனைவருக்கும் இப்தார் திறப்பு நோன்பு கஞ்சி மற்றும் விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் ஆர்.விஜயகுமாரி, மருத்துவர் வீ.தீனபந்து, எஸ்.எஸ்.சிவவடிவு, வி.பழனி, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின் இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள் மருத்துவர்கள் குமரகுரு, வீ.தீனபந்து, பழனி, கே.சேந்தன், வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் மருத்துவர் ஈப்பன் மற்றும் கே.மயிலாம்பிகைகுமரகுரு  உள்பட பலர் பங்கேற்றனர்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad